நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் SLPP (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்) தேசியப்பட்டியல் வேட்பு மனுவில் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் இம்முறையும் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இவர் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலை பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரேஒரு முஸ்லிம் பிரதிநிதியாக கட்சியின் தேசியப்பட்டியல் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2020 ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே இருந்துள்ளதும் விசேட அம்சமாகும்.
இலங்கையின் முன்னணி மாணிக்க வர்த்தகர்களில் ஒருவரான மர்ஜான் பளீல், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் எம்.எஸ்.எம். பளீல் ஹாஜியாரின் புதல்வராவார்.