இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்னவின் நியமனம் தொடர்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்