கொழும்பு
தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியில் கலேவெல தலகிரியாகம பகுதியில் ஒக்டோபர் (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒக்டோபர் (11) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எதபெதிவெவ பிரதேசத்தில் வசிக்கும் இருபத்தைந்து வயதுடைய கான்ஸ்டபிளான சந்திமா ஜும்னி தில்ருக்ஷி, பெதுருதுடுவ பொலிஸில் கடமையாற்றி விடுமுறையில் சென்றவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் தாயார் திருமதி டபிள்யூ.எம்.ஹின் மெனிகே கூறுகையில், தனது மகள் நேற்று முன்தினம் இரவு பெத்ரூதுடுவ பொலிஸில் இருந்து விடுமுறை பெற்று வீட்டிற்கு வந்ததாகவும், பின்னர் காலை தனது சகோதரர்களின் பிள்ளைகளுக்கு பொம்மைகள் மற்றும் உணவுகளை வாங்குவதற்காக சென்றதாகவும் தெரிவித்தார். .
தம்புள்ளை நகருக்குச் சென்று கொண்டிருந்த போதே அவர் இந்த விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.