அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான சம்பள உயர்வு சாத்தியமா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்.
எந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என்பதும் பல கட்டங்களில் செய்யப்படுமா என்பதும் வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின் போது கலந்துரையாடி தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம்.
எனினும், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளது