2023 – 2024ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் 30.09.2024 நிறைவடையவுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய திகதிக்குள் வரிகளை செலுத்த தவறும் நபர்களுக்கு எதிராக உள்நாட்டு இறைவரி சட்ட நியதிகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களிடமிருந்து வரிகளைப் பெற்றுக் கொள்வதற்காக கடுமையான வரி சேகரிப்பு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒருவர் வரியைச் செலுத்தத் தவறினாலோ அல்லது தாமதமாகச் செலுத்தியதற்காக அபராத வட்டி விதிக்கப்படும் என்பதுடன், அறவிடப்படும் அபராதத் தொகை அல்லது வட்டித் தொகை குறைக்கப்பட மாட்டாது என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நிலுவையில் உள்ள அனைத்து இயல்பு நிலை வரிகளையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.ஏ.சேபாலிகா சந்திரசேகர கோரியுள்ளார்.