கல்பிட்டி அல் அக்ஷா தேசிய பாடசாலையில் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மற்றும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு கல்பிட்டி.Y. M. M. A கிளையினால் .பதக்கமும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் வைபவம் 24.09.2024 அன்று அல் அக்ஷா தேசிய பாடசாலையின் தம்பி நெய்னா மரிக்கார் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதம அதிதிகளாக A. M. ஜவாத்( கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளர்),கௌரவ அதிதிகளாக U. M. M அமீர்( அல் அக்ஷா தேசிய பாடசாலை அதிபர் ), முஜாஹித் நிசார் ( அகில இலங்கை YMMA மாவட்ட பணிப்பாளர் ) திருமதி M. M. M. ரோஸ்( அல் அக்ஷா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
விழாவில் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் அதற்கு உறுதுணையாக செயல்பட்ட 10 ஆசிரியர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.
விஷேட நிகழ்வு ஒன்றாக அதிதிகளுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தப்பட்டனர்.