2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனத்தை அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச 27.09.2024 வழங்கி வைத்தார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஐக்கிய மக்கள் சக்தி இதனை தெரிவித்துள்ளார்.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் நியமிக்கப்பட்டுள்ளார்.