லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
27.09.2024 முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக முதித பீரஸ் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி பதவியேற்றிருந்தார் .
அதற்கு முன்னர் குறித்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக அவர் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.