இலங்கையின் ஜனாதிபதியாக இருந்து பதவி விலகிய ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார் அதேவேளை தேசிய பட்டியலிலும் இடம் பெற மாட்டார்.
அதேவேளை தேசிய விடயங்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஆலோசனைப் பாத்திரமொன்றை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து, இலங்கையின் முன்னோக்கி செல்லும் வழியை கலந்துரையாடுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ருவான் விஜேவர்தன நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்