“2030 ஐ வெற்றியாக்க தொடர்ந்தும் முன்னேற்றப் பாதையில் சவுதி அரேபியா”
“சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள்”
அதி மேன்மை தங்கிய இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான, மேன்மை தங்கிய மன்னர் ஸல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், மற்றும் சவுதி அரேபிய இளவரசரும் பிரதமருமான மேன்மை தங்கிய முஹம்மத் இப்னு ஸல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் மேன்மை தங்கிய காலித் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கும் சவுதி அரேபிய நாட்டு மக்களுக்கும் சவுதி அரேபியாவின் 94வது தேசிய தினத்தை முன்னிட்டு தனிப்பட்ட ரீதியிலும் எமது நிறுவனம் சார்பாகவும், இலங்கை மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.
பாரிய அளவு பெரும் பொருளாதார ரீதியிலும், பாரிய அபிவிருத்தியிலும் முன்னேற்றம் அடைந்த, மனிதாபிமானத்தில் என்றும் முன்நிற்கின்ற சவுதி அரேபியாவின் அபார வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் அடைகின்றோம். சவுதி அரேபியா அடைந்த முன்னேற்றம், பாரிய வளர்ச்சி, மறுமலர்ச்சி மற்றும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய எண்ணற்ற சாதனைகள் மூலம் சவுதி அரேபியா உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் சவுதி அரேபிய மன்னரதும் இளவரசர் அவர்களினதும் ‘நியோம்”, ‘த லைன்”, ‘2030 விஷன்” 2030 எக்ஸ்போ போன்ற பாரிய பொருளாதார இலக்கை வெற்றிகரமாக்கும் வகையில் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் சவுதி அரேபியாவின் பெயரை மென்மேலும் உயர்த்தியுள்ளது. இச்சுதந்திரத்துக்கும் சவுதி அரேபியாவின் முன்னேற்றத்துக்கும் மூல கர்த்தர் மன்னர் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் அவர்கள். அவருக்குப் பின்னால் நாட்டை ஆண்ட அனைவரும் இப்பெரும் முன்னேற்றத்துக்கு அயராது உழைத்தவர்கள். அவர்கள் அனைவரும் என்றும் நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.
இலங்கை சவுதி நற்புறவு என்பது மிக நீண்டது. சவுதி அரேபியா இலங்கைக்கு பாரிய அளவு நிதி உதவிகள் வழங்கியுள்ளது. தொடர்ந்தும் மனிதாபிமான அனைத்து உதவிகளையும் சவுதி அரேபியா இலங்கை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. கொழும்பு பெரியாஸ்பத்திரியில் அதி நவீன கட்டடங்கள், கிண்ணியா பாலங்கள், கிழக்கை நோக்கிய நீண்ட சாலை நிர்மானம், பல்கலைக் கழக கட்டங்கள், சுனாமி, கொரோனா மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போதெல்லாம் தாராளமாக உதவியமை, சவுதி அரேபிய பல்கலைக் கழகங்களில் இலங்கை மாணவர்களுக்கு மேற்படிப்பைத் தொடர ஒவ்வொரு வருடமும் புலமைப் பரிசில்கள், நோன்பு காலங்களில் பல்லாயிரம் டொன்கள் இலவச பேரீத்தம் பழங்கள், பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்துக்கு 300 டொன்கள் பேரீத்தம் பழங்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கியமை, இலங்கையில் முதற் தடவையாக பாரயளவிலான பணப்பரிசில்களுடன் கூடிய குர்ஆன் மனனப் போட்டி, இலங்கை சவுதி அரேபிய பாறாளுமன்ற நற்புறவு ஒன்றியம் இலங்கை சவுதி அரேபிய பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள், எல்லைகள் இல்லாத மனித நேயத்தை நோக்கி என்ற தொனிப் பொருளில் மன்னர் ஸல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் மூலம் இலங்கையில் இனபாகுபாடின்றி பல்லாயிரக்கணக்கான வருமைக் கோட்டின் கீழ் வாழும் ஏழை மக்களுக்கு இலவச கண் சத்திர சிகிச்கைள் மேற்கொண்டு பார்வையற்றவர்களுக்கு பார்வை வழங்கியமை, சூடான் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களையும் மீட்டெடுத்து எமது நாட்டுக்கு அனுப்பி வைத்தமை, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அனைத்து முன்னெடுப்புகளிலும் சவுதி அரேபியா இலங்கையின் பக்கமே நின்றமை என இலங்கைக்கு சவுதி அரேபியாவின் எண்ணிலடங்கா மனிதாபிமான உதவிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அத்தோடு அதிகளவிலான சவுதி அரேபிய சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் சவுதி-இலங்கை நீண்ட வலுவான நற்புறவு நாடாகத் திகழ்கிறது.
மத்திய கிழக்கில் நிலப்பரப்பிலும் மக்கள் தொகையிலும் பொருளாதார பாரிய வளர்ச்சியிலும் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளை நிறைவேற்றும் புனிதஸ்தலங்கள் நிறைந்த இடமாகவும் மத்திய கிழக்கில் தலை நிமிர்ந்து நிற்கும் ஓரே நாடு சவுதி அரேபியாவாகும். சவுதி அரேபியாவுக்கு மத்திய கிழக்கில் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. அத்துடன் முஸ்லிம்களின் புனிதஸ்தலங்கள் அங்கே இருப்பதாலும் உலக முஸ்லிம்களின் மனதிலும் ஆழமாகப் பதிந்த ஒரு நாடு என்றால் அது சவுதி அரேபியாவாகும். அத்துடன் உலக முஸ்லிம்களின் சகல விடயங்களிலும் அக்கறை செலுத்தி அவர்களது மார்க்க மற்றும் உலகலாவிய ரீதியில் தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதில் முன்நிற்கின்ற நாடு என்றால் சவுதி அரேபியாவாகும். அது மட்டுமல்ல உலகில் முஸ்லிம் அல்லாத நாடுகளின் நலன் விடயங்களிலும் மிகுந்த அக்கறை செலுத்தி அந்நாடுகளொடு பரஸ்பர உறவுகளைப் பேணி வருகிறது. உலக வல்லரசு நாடுகளுடன் மிகப் பலமான உறவுகளைப் பேணி வரும் நாடு என்றால் சவுதி அரேபியா தான். அதனால் தான் உலக வல்லரசு நாடுகள் கூட சவுதி அரேபியாவின் தயவை நாடி நிற்கிறது எனலாம்.
அத்தோடு தீவிரவாதம் பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கியெறிந்து சகிப்புத்தன்மை சகவாழ்வை உலகில் நிலைநாட்டிய மிகச் சிறந்த நாடும், போதை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பில் வெற்றிகண்ட நாடும் சவுதி அரேபியாவாகும். தீவிரவாத்ததை ஒழித்துக் கட்டும் நோக்கில் சர்வதே மாநாடுகளை வருடாவருடம் சவுதி அரேபியாவிலும் உலகின் பல நாடுகளிலும் தொடர்ந்தும் நடாத்தி வருகிறது சவுதி அரேபியா. அந்த வகையில் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் தீவிரவாத்ததை ஒழித்து சகிப்புத் தன்மையயை நிலைநாட்ட புனித மக்காவில் சர்தேச மாநடொன்றை நடாத்தியதோடு இம்மாதம் முதல் வாரத்தில் ஒரு வார காலத்திற்குள் ஏழு நாடுகளில் தீவிரவாத்ததை ஒழித்து சகிப்புத் தன்மையயை நிலைநாட்டவென ஏழு மாநாடுகளை நடாத்தி சாதனை படைத்தது சவுதி அரேபியா.
மேலும் நிர்க்கதியான நாடுகளுக்கு உதவுதல், அந்நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாடுகளின் திறைசேரிகளில் வட்டியில்லா நீண்ட கால தவணையில் கடன் அடிப்படையில் பல பில்லியன்களை வைப்பிலிடுதல், உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளில் தலையிட்டு அங்கு சமாதானத்தை நிலை நாட்டுதல் போன்ற அனைத்தையும் முன்னெடுக்கிறது சவுதி அரேபியா.
பலஸ்தின மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை அள்ளி வழங்குவதிலும் சவுதி அரேபியாவை விட வேறு நாடில்லை எனும் அளவுக்கு சவுதி அரேபியா மனிதாபிமானத்தில் முன்நிற்கிறது.
அத்தோடு நவீன கண்டுபிடிப்புகள், ஏ ஐ தொழில்நுற்பம், சைபர் பாதுகாப்பு போன்றவற்றிலும் சவுதி அரேபியா மிக முன்னேற்றமடைந்த நாடாகத் திகழ்கிறது. அந்த வகையில் இம்மாதம் 10 தொடக்கம் 12ம் திகதி வரை சர்வதேச மாநாடொன்றை சவுதி அரேபியா நடாத்தி உலகத்தின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது.
அரசியலில் சவுதி அரேபியா மிகப் பலம் வாய்ந்த நாடாகத் திகழ்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கின் ராஜா என்றால் கூட அது மிகப் பொருத்தமானது. ஏனெனில் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் உலக முஸ்லிம் நாடுகளும் சவுதி அரேபியாவை முன்னிலைப்படுத்தி சவுதி அரேபியாவை தங்களது தலைமைத்துவ நாடாகப் பார்க்கிறது.
சவுதி அரேபியாவை பொருளாதார மற்றும் இதர அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் இலவரசர் மேன்மை தங்கிய முஹம்மத் பின் ஸல்மான் அவர்கள் ஆர்பித்த 2030 விஷன் எக்ஸ்போ 2030 போன்றது இதில் ஒரு பாரிய மைற்கல்லாகும். 2030 சவுதி விஷன் என்பது ஒரு துடிப்பான சமூகம் வளமான பொருளாதாரம் மற்றும் இலட்சிய தேசத்ததை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட பயணத்திற்கான ஒரு வரை படமாகும். அதே போல் எக்ஸ்போ 2030 முன்னோடியான வகையில் தேசிய மாற்றத்தை அடைவதற்கான சவுதி அரேபியாவுக்குக் கிடைக்க இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
உலக வல்லரசுகளுடன் போட்டியிட்டு வல்லரசு நாடாக மாறி வருகிறது சவுதி அரேபியா.
பொருளாதார ரீதியில் சவுதி அரேபியா தன்னிறைவடைந்து வருவது எமக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதனால் தான் அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ் ரஷ்யா சீனா இந்தியா போன்ற மிகப் பெரும் வல்லரசு நாடுகள் சவுதி அரேபியாவின் பொருளாதாரக் கொள்கையோடு இணைந்து தங்களது பொருளாதாத்தை மேம்படுத்திக் கொள்ள தொடர்ந்தும் சவுதி அரேபியாவோடு மிக நெருக்கமாக இருந்து செயற்படுகின்றனர். இதற்கு சவுதி பிரான்ஸ், சவுதி சீனா, சவுதி ரஷ்யா, சவுதி பிரிதானியா, அண்மையில் நடந்த சவுதி இந்தியா ஜீ 20 பொருளாதார உச்ச மாநாடுகளைக் குறிப்பிடலாம். சுருங்கக் கூறின் சவுதி அரேபிய அரசு உலகில் அனைத்து நாடுகளுக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தாக்கம் செலுத்தும் மிக முக்கியமான நாடாகத் திகழ்கிறது.
சவுதி அரேபியாவை பொருளாதார மற்றும் இதர அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் இலவரசர் மேன்மை தங்கிய முஹம்மத் பின் ஸல்மான் அவர்கள் ஆர்பித்த 2030 விஷன் எக்ஸ்போ 2030 போன்றது இதில் ஒரு பாரிய மைற்கல்லாகும். 2030 சவுதி விஷன் என்பது ஒரு துடிப்பான சமூகம் வளமான பொருளாதாரம் மற்றும் இலட்சிய தேசத்ததை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட பயணத்திற்கான ஒரு வரை படமாகும். அதே போல் எக்ஸ்போ 2030 முன்னோடியான வகையில் தேசிய மாற்றத்தை அடைவதற்கான சவுதி அரேபியாவுக்குக் கிடைக்க இருக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
மேலும் உலகிலுள்ள பெற்றோலிய வள நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும். என்றாலும் பெற்றோலிய வளம் சாராத உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சவுதி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. குறிப்பாக முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இரு புனித பள்ளிவாசல்களின் காவலரும், மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத், பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் ஸஊத் ஆகியோர் இவ்விடத்தில் அதிக அக்கரை எடுத்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் பதவிக்கு வந்த பின்னர் சவுதியின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி முக்கிய இடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மன்னர் சல்மானும் இளவரசர் முஹம்மத் பின் சல்மானும் முன்னெடுத்துவரும் துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் விளைவாக உலகமே சவுதி அரேபியாவை திரும்பிப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. சவுதியின் துரித பொருளாதார வளர்ச்சி குறித்து பல தரப்பினரும் கவனம் செலுத்தும் நிலைமை உருவாகியுள்ளது.
இவ்வாறான சூழலில் இச்சிறந்த தினத்தில் 94 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அதி மேன்மை தங்கிய இரு புனிதப் பள்ளிவாசல்களின் பாதுகாவலரும் சவுதி அரேபிய மன்னருமான, மேன்மை தங்கிய மன்னர் ஸல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், மற்றும் சவுதி அரேபிய இளவரசர் மேன்மை தங்கிய முஹம்மத் இப்னு ஸல்மான் இப்னு அப்துல் அஸீஸ் ஆல் சஊத், மற்றும் இலங்கைக்கான சவுதி அரேபியத் தூதுவர் மேன்மை தங்கிய காலித் ஹமூத் அல் கஹ்தானி ஆகியோருக்கும், சவூதி மக்கள் அனைவருக்கும் தனிப்பட்ட ரீதியிலும் எமது நிறுவனம் சார்பாகவும் இலங்கை மக்கள் சார்பாகவும் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடுஇ தாங்களுக்கு ஈடேற்றமான வாழ்வையும் நீண்ட ஆயூளையும் சிறப்பான எதிர்காலத்தையும் தந்து மென்மேலும் உலக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய நல்ல திடகாத்திரத்தையும் தரவும், சவுதி-இலங்கை நற்புறவு என்றும் நிலைத்து வலுவானதாக இருக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தின்றேன்.
அன்புடன்
அஷ்ஷைக் எம்.எச்.ஷைஹுத்தீன் பி.ஏ. மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம், கொழும்பு