ஏ.எஸ்.எம்.ஜாவித்
நீர்கொழும்பு
நீர்கொழும்பு போருத்தோட்ட ஹிமா பெண்கள் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆலோசனை வழிக்காட்டல் நிகழ்வு கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை போருத்தோட்ட அம்ரா திருமண மண்டபத்தில் ஹிமா அமைப்பின் தலைவி நஸ்மிய நஸ்மின் தலைமையில் இடம்பெற்றது.
ஒருகிணைப்பாளர் அஹமட் முனவ்வரின் ஆலோசணையின் பேரில் சிங்கப்பூரின் புதிய நிலா ஆசிரியரும் உதவுங்கரங்கள் நிறுவனத் தலைவரும், சமூக நீதி செயற்பாட்டாளருமான முஹமட் ஜஹாங்கிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பெண்களுக்கான உளவள சம்பந்தமாகவும் சமய, மருத்துவ முறைமைகளில் எவ்வாறு செயற்படுவது; மனதை எவ்வாறு ஒருநிலைப்படுத்தி தத்தமது வேகைளை செய்வது மற்றவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வது, உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சிறப்பான உரை ஒன்றை வழங்கினர்.
இந்நிகழ்வில் போருத்தொட்ட சிவில் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எம்.ஜே. ஜஸான், ஹிமா அமைப்பின் அமைப்பின் செயலாளர் சாதிய நபீர், ஹிமா அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பல பெண்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.