நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் 22.09.2024 மதியம் 12 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், மக்களின் மேலதிக பாதுகாப்பு கருதி 21.09.2024 இரவு 10 மணி முதல் காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.