இஸ்மதுல் றஹுமான்
நாம் நாட்டை விட்டு தப்பி ஓட மாட்டோம். எம்முடன் உள்ளவர்களும் நாட்டை விட்டுச் செல்பவர்கள் அல்ல. ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவது நிச்சயம் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா நீர்கொழும்பு, கடற்கரை தெரு சென் செபஸ்தியன் மஹா வித்தியாலய வாக்குச் சாவடியில் வாக்களித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது கூறினார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் தோல்வி அடையும் மொட்டுக் கட்சியில் யாரோதான் நாட்டை விட்டுச் தப்பிச் சென்றுள்ளார்கள். சஜித் உடன் ஒப்பந்தம் செய்தவர்கள் சஜித் தோல்வி அடைவார் என்பதால் நாட்டிலிருந்து செல்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விகரமசிங்க நிச்சயம் வெற்றிபெறுவார். அவர் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்ப பாரிய முயற்சி செய்தவர். அதற்கு நன்றிக் கடணாக மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. எனக்கு முன்னால் வரிசையில் இருந்தவர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பதாக கூறினார்கள்.
நாம் மொட்டுக்கு எதிராக போட்டியிடுபவர்கள்.
அரசாங்கத்தில் இருந்து வெளியே சென்ற அவர்கள்தான் சஜித்தை அதிகாரத்திற்கு கொண்டுவர வேலை செய்பவர்கள். சஜித் தோல்வியுறுவார் என
தெரிந்துகொண்டதும் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாததினால் அவர்கள் செல்ல முடியும்.
நாம் ரணிலின் வெற்றிக்காக உழைத்தவர்கள் நாளை காலை (இன்று) ரணில் வெற்றிபெறுவார்.
ரணில் நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்தீர தன்மைய, சமாதானத்தை, ஐக்கியத்தை ஏற்படுத்தினார். ஜனநாயகத்தை பாதுகாத்தார். அடுத்த ஜனாதிபதியாக ரணிலை நியமிக்க பெரும்பாலானவர்கள் முடிவு செய்துள்ளனர். அதனால் பிரச்சிணை இல்லை. விருப்பு வாக்கு எண்ணக்கூடிய நிலை ஏற்படாது. 50 வீதத்திற்கு மேல் பெறுவார். நாம் சவால்களுக்கு முகம் கொடுத்து வேலை செய்தவர்கள். மக்களுடன் நாம் இருக்கிறோம். அதனால் மக்கள் எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என தெரிவித்தார்.