தேர்தல் கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் சமூகமளிக்காவிடின் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று களுத்துறை மாவட்டத்தில் தேர்தல் கடமைகளை அவதானிப்பதற்காக வந்து கண்காணிப்பு கடமைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளுக்கு தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட பணிகளுக்குரிய அறிக்கையை சமர்ப்பிக்காத எந்த அரசு உத்தியோகத்தருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவித்துள்ளார்.