தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி சனிக்கிழமை ரயில் நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி நீண்ட தூர சேவைகளுக்காக ரயில்கள் இயக்கப்படும் என்றும், குறுகிய தூர ரயில்களில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட ரயில்களை இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.