ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக மேலதிக இ.போ.ச பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் தினத்தன்று மேலதிக தனியார் பஸ் சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தனியார் பேருந்து ஊழியர்களும் வாக்களிக்க செல்வதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குறுகிய தூர சேவைகளை தாங்கள் நடத்துவதாக சங்கங்கள் தெரிவிக்கின்றன.