இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உங்களுக்கு விருப்பமான ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கவோ அல்லது விருப்புத் தெரிவை வாக்குச்சீட்டில் அடையாளப்படுத்தவோ வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று (19) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், வாக்குகள் குறிக்கப்பட வேண்டிய விதம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க விளக்கமளித்தார்.
” எவரேனும் வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க விரும்பினால் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு முன்னால் உள்ள பெட்டியில் 1 என்ற இலக்கத்தை இடுவதன் மூலம் வாக்களிக்க முடியும்.
மேலும், அதன் பின்னர் 2 மற்றும் 3 என்ற இலக்கங்களைக் குறிப்பதன் மூலம் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவைக் குறிப்பிட முடியும்.
இலக்கம் ஒன்றிற்கு பதிலாக X குறியைப் பயன்படுத்த யாராவது நினைத்தால், அந்த வாக்கும் இந்தத் தேர்தலில் செல்லுபடியாகும் வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
X குறியிட்டு வாக்கு செலுத்தப்பட்ட பின்னர் விருப்புத் தெரிவு வாக்கை செலுத்த முடியாது.