நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 20.09.2024 நடைபெறவுள்ளது.
21.09.2024 காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் 18.09.2024 நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்ததோடு, தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் எவ்விதமான பிரச்சார நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறும் எந்தவொரு தரப்பினரையும் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்தும் திறன் பொலிஸாருக்கு இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
வாக்காளர் ஒருவர் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது எவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க விளக்கினார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க அல்லது வாக்கினை அடையாளப்படுத்த முடியும்.
இதற்கிடையில், வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத மக்கள் அவற்றைப் பெறுவதற்காக தபால் நிலையங்களை எதிர்வரும் சனிக்கிழமையும் திறந்து வைக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
தபால் நிலையங்களில் சுமார் மூன்று இலட்சம் வாக்காளர் அட்டைகள் மீதம் உள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.