தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சில பெற்றோர்கள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு முன்பாக 18.09.2024 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் செயலி மூலம் ஆசிரியர் ஒருவரால் பகிரப்பட்டதாகப் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களினால் முன்னதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த வினாத்தாளைத் தயாரித்த பரீட்சை சபையுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் 3 வினாக்களை நீக்கப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று கல்வி அமைச்சுக்கு முன்பாக சில பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், பின்னர் அவர்கள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துடன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.