September 18, 2024
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை ஏற்பாடு செய்திருந்த மீலாது நபி விசேட நிகழ்வு தெமட்டகொடை வை.எம்.எம்.ஏ.பேரவையின் பிரதான மண்டபத்தில் வை.எம்.எம்.ஏ பேரவை சமய விவகார குழுத் தலைவர் பெளசான் அன்வரின் ஏற்பாட்டில் பேரவைத் தலைவர் அம்ஹர் எம் சரீப் தலைமையில் 16.09.2024 திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் மீலாது தின விசேட உரையை மெளலவி ஹாபிஸ் இஹ்ஸான் காதிரி உரையாற்றினார். இதன்போது இந்துமத குருக்கள், வை.எம்.எம்.ஏ பேரவை உறுப்பினர்கள், அஹதியாக பாடசாலை மாணவர்கள், கலந்து கொண்டனர்.