உடல் ரீதியிலான தண்டனையை அனைத்து வகையிலும் தடை செய்யும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
“அனைத்து வடிவங்களிலும் உடல் ரீதியான தண்டனையை தடைசெய்யும் வகையில் தண்டனைச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர்களின் 20 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிகளுக்குப் பிறகு இந்த சாதகமான முடிவு கிடைத்துள்ளது.
இது குறித்து வர்த்தமானி வெளியிடப்பட்டதும், இறுதி தீர்மானத்துக்காக இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், “என்று ஜனாதிபதி ரணில் தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று (16) தெரிவித்துள்ளார்.