இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 24 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த இளைஞனின் உறவினர்கள் 151 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 14 வயது பள்ளி மாணவர் உயிரிழந்ததை அடுத்து, இந்த ஆண்டு மலப்புரத்தில் நிபாவால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும்.
உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் பற்றி எச்சரித்துள்ளதுடன் வைரஸை தடுக்க தடுப்பூசி இன்னும் கண்டுப்பிடிக்கவில்லை.