ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் 12/09/2024 இன்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தின் போது ஸ்தலத்திலே ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஏறாவூர் தளவாய் அம்மன் கோயில் வீதியில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 27 வயதுடைய அழகன் அஜீத்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு கூரை ஓடுகள் இறக்கி வைக்கப்பட்டு கொண்டிருந்த சிறியரக உழவு இயந்திரத்தில் பின் பக்கமாக மோதியதினாலே சம்பவ இடத்தில் மரணித்துள்ளார்.
ஏறாவூர் பொலிசாரின் வேண்டுகோளுக்கு அமைய சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .