கொழும்பு
இஸ்ரேலிலும் பலஸ்தீனிலும் அதிகரித்து வரும் தாக்குதல் மற்றும் வன்முறைகளினால் ஏற்படும் இழப்பு குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.
வன்முறையை உடன் நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுத்துள்ளதுடன் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் உச்சபட்ச கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கோரியுள்ளது.
1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே உள்ள இரு நாடுகளினதும் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பரப்புக்களுக்கு இணங்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை உறுதியாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ள வெளிநாட்டைமைச்சு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது.