சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன உடனடியாக பதவி விலகியதை அடுத்து அந்த சங்கத்தின் பதில் தலைவராக அனுர மத்தேகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன கடந்த 13 ஆம் திகதி பதவி விலகினார்.
ஜப்பான் ஜய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆலோசனை சேவை திட்டம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்ன நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.