நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
வடமேற்கு நைஜீரியாவில், ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாயப் பணிகளுக்காகத் தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்கிறார்கள்.
அந்த வகையில் 70 பேர் படகில் சென்ற போது திடீரெனெ ஆற்றில் கவிழ்ந்தது.
இதில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.