11 பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல, சிறைச்சாலை அதிகாரிகளால் நேற்று (12) கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பிலேயே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.