தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 50 ரூபா கொடுப்பனவும் வழங்குவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் 10.09.2024 இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.