சீனாவில் மனித மூளையைப் பாதிக்கும் புதிய வைரஸ் குறித்து சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அதற்கு ‘வெட்லேண்ட் வைரஸ்’ என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த புதிய வைரஸ் உண்ணி கடித்தால் மனிதர்களின் மூளை பாதித்து நரம்பு மண்டலத்தை முற்றிலும் முடக்குகிறது. இந்த வைரஸுக்கு தற்போது சிகிச்சை இல்லையெனவும் மேலும் நுண்ணுயிர் எதிர்ப்புகள் இந்த வைரஸை பலவீனப்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.
சீன மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய வைரஸைப் பற்றி முதன்முதலில் 2019 இல் அறிந்திருந்தனர்.
சீனா மங்கோலியாவில் இத்தொற்றினால் பாதிக்கபட்ட 61 வயதான முதல் நோயாளியை அடையாளம் கண்டுள்ளனர்.
இதன்போது இந்த வைரஸ் தொற்றுக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.