இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
குரங்கம்மை தொற்று பாதிப்பு பரவியுள்ள நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஆண் ஒருவருக்கு இந்நோய் பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதால் குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அடையாளம் காணப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.