எதிர்வரும் வாரத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் நாட்டை வந்தடைய உள்ளது.
அதன்பிற்பாடு 40 ரூபாவிற்கு முட்டை வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும்,முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர உறுதிப்படுத்தியுள்ளார்.