ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளுடன் 09.09.2024 கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விரிவாக கலந்துரையாட உள்ளதாக என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்தோடு, 09.09.2024 பிற்பகல் தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.