லயன் அறைகளுக்குப் பதிலாக, கிராமங்களை உருவாக்கி, அதற்கான காணி உரிமையையும், வீட்டுரிமையையும் வழங்கி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது தனது முன்னுரிமையான எதிர்பார்ப்பு என ஜனாதிபதி வேட்பாளர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அஸ்வெசும நிவாரணம் வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஹப்புத்தளையில் 08.09.2024 பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் முடியும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.