( ஐ. ஏ. காதிர் கான் )
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுர குமார திஸாநாயக்க, அண்மைய தேர்தல் நடவடிக்கைகளின் சோர்வு காரணமாக சுகவீனமடைந்துள்ளதாக, தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (07.09.2024) சனிக்கிழமை தெய்யந்தரவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது உறுதிப்படுத்தினார்.
மருத்துவ ஆலோசனையை அடுத்து, அநுரவுக்கு ஒரு நாள் ஓய்வு எடுக்குமாறும், திட்டமிடப்பட்ட பேரணியில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அவருக்கு பதிலாக கலந்து கொண்ட டில்வின் சில்வா, ஜனாதிபதியான பின்னர் அநுர குமார, அதே இடத்தில் பேரணியை நடத்துவார் எனவும், அவர் ஆதரவாளர்களுக்கு உறுதியளித்தார்.