ஏற்கனவே பதிவான வாக்குகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.
சமூக ஊடக தளங்களில் இருந்து இடுகையை அகற்ற ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றியவர்கள் மற்றும் பல்வேறு தளங்களில் பகிர்ந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேற்கூறிய குற்றச்சாட்டில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 400,000 ரூபா அபராதம் அல்லது இலங்கையின் தேர்தல் சட்டத்தின்படி 6 மாத சிறைத்தண்டனை வழங்கமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.