பொலன்னறுவை கதுருவெல வீதியிலுள்ள வணிக வளாகத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவியுள்ளது.
07.09.2024 இரவு இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினரால் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ பரவாமல் தடுக்க இராணுவம், பொலிஸார் மற்றும் விமானப்படையினர் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், தீ பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இதன் காரணமாக மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் ஒரு பகுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.