எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1700 ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ராகலை பகுதியில் 06.09.2024 இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன விடயத்தில் நிரந்தர தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.