மன்னார் – பேசாலை பகுதியில் 188 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
83 பொதிகளில் குறித்த கஞ்சா தொகை பொதி செய்யப்பட்டிருந்ததாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன் மொத்த பெறுமதி 75 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.