ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித கே.ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, மூன்றாவது நாளாக நேற்று இடம்பெற்றது.
நேற்றைய தினம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம், பொலிஸ் நிலையங்கள், விசேட அதிரடிப்படை முகாம்கள் மற்றும் விசேட பொலிஸ் பிரிவுகள் என்பனவற்றிலும் தபால் மூல வாக்குகள் பதிவு செய்யப்பட்டது