இஸ்மதுல் றஹுமான்
மற்றுமொரு மனிதப் புதைகுழி கொழும்பு துறைமுக வளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளுக்காக அகழ்வின் போது மனித எலும்புக்கூடுகள் சில துறைமுக 1ம் இலக்கம் நுலைவாயில் ஊடகச் செல்லும் வீதியின் சுற்றுவட்ட தரையிலிருந்து வெளிப்பட்டன.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் I.M.S பண்டார இலங்கசிங்க இன்றைய தினம் வருகை தந்து ஸ்தலத்தை பரிசீலனை செய்ததுடன் காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் மற்றும் காணாமல் போனோர் அலுவலக பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த மனிதப் புதைகுழியின் அகழ்வு வேலை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த அகழ்வுப் பணிக்கு பொறுப்பாக பேராசிரியர் ராஜ் சோமதேவ கடமையாற்றுகிறார்.
கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி இலங்கையில் தற்செயலாக தோன்றிய 22 ஆவது மனிதப் புதைகுழி ஆகும்.