உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) பதவி விலகியுள்ளார்.
அவரது பதவி விலகல் குறித்த அறிவிப்பை அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ருஸ்லான் ஸ்டீபன்சுக் (Ruslan Stefanchuk) இன்று வெளியிட்டுள்ளார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சரின் பதவி விலகல் தொடர்பில், சட்டமியற்றுபவர்களினால் விரைவில் விவாதிக்கப்படும் எனவும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சி அரசாங்கத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சரவை அமைச்சர்கள் பலருடன் இணைந்து உக்ரைனின் வெளிவிவகார அமைச்சரும் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.