விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான உத்தரவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபின் ஊசி மருந்தை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பான வழக்கு நிறைவடையும் வரையில், தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, கெஹலிய ரம்புக்வெல்ல மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான உத்தரவை இன்றைய தினம்(04.09.2024) பிறப்பிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் அறிவித்திருந்தது.
எனினும், குறித்த தீர்மானத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது.