( ஐ. ஏ. காதிர் கான் )
“18 முதல் 29 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் 54 வீதமானவர்கள், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்காவிற்கு ஆதரவளிப்பது, கருத்துக் கணிப்பொன்றின் மூலம் தெரிய வந்துள்ளதாக,
‘இன்ஸ்டியுட் ஒவ் ஹெல்த் பொலிசி’ மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் 18 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் அநுர குமார திஸாநாயக்கவிற்கு 54 வீதமானவர்களும், சஜித் பிரேமதாஸவிற்கு 35 வீதமானவர்களும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு 9 வீதமானவர்களும் தமதுஆதரவுகளை வெளியிட்டுள்ளனர்.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 30 முதல் 59 வயதிற்கு உட்பட்டவர்களில் 38 வீதமானவர்கள் சஜித் பிரேமதாஸவிற்கும்,37 வீதமானவர்கள் அநுர குமார திஸாநாயக்கவிற்கும், 22 வீதமானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமது ஆதரவுகளை வெளியிட்டுள்ளனர்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 38 வீதமானவர்கள், சஜித் பிரேமதாஸவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆதரவுகளை வெளியிட்டுள்ள அதேவேளை, 16 வீதமானவர்கள் அநுர குமார திஸாநாயக்கவிற்கும் ஆதரவுகளை வெளியிட்டுள்ளம குறிப்பிடத்தக்கது.