ஊடகவியலாளர் – ஏ.சி பௌசுல் அலிம்
ஜனாதிபதி ரணில் ஒரு இனவாதயல்ல. இங்கு கூடியிருக்கும் நாங்கள் இனவாதிகளல்லர். சிங்கள தமிழ், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி எல்லோரும் இலங்கையர்கள் என்ற ஒத்த சிந்தனை கொண்டவர்களாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த தேசத்தை வளமான பூமியாக மாற்ற முடியும். என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மினுவாங்கொடையில் இடம்பெற்ற கம்பஹா மாவட்ட முஸ்லிம்களுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
மினுவாங்கொடை காஞ்சனா மண்டபத்தில் நேற்று முன்தினம் 30 நடைபெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆதரவளிக்கும் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி ஆலோசகர் ஆசுமாரசிங்க, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வெத்தலை மாபோல நகர சபை முன்னாள் தலைவர் ஏ.எச்.எம் நௌஷாத், முன்னாள் மினுவாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் மொகமட் கஃபார், மினுவாங்கொடை முஸ்லிம் வாலிப முன்னணியின் தலைவர் எம். ஆர் இன்ஷாப் மற்றும் கம்பஹா மாவட்ட பிரதேச முஸ்லிம்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரதேச மக்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தை கம்பஹா மாவட்ட முஸ்லீம் கூட்டமைப்பு ஏற்படு செய்திருந்தது. வத்தளை மாபோல நகர சபை முன்னாள் தலைவர் ஏ.எச். எம் நௌஷாத் தலைமையில் நடைபெற்ற இச்சந்தர்ப்பத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தொடர்ந்து பேசியதாவது.
தமிழ் மக்களோ முஸ்லிம்களோ இனவாதிகள் அல்ல சிங்கள மக்கள் மத்தியில் உள்ள இனவாத போக்குடைய சிலரின் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள இனவாத போக்கக்கூடிய சிலரும் முஸ்லிம்கள் மத்தியில் உள்ள இனவாத போக்கு கொண்ட சிலரும் செய்யும் இனவாத அரசியலால் நாட்டுக்கு பெரும் தீங்கு ஏற்பட்ட காலம் ஒன்று இருந்தது இனியும் இதை தொடர இடம் அளிக்க முடியாது.
இனவாதம் என்பது யாரிடம் இருந்தாலும் அவை அவற்றை நாங்கள் புறக்கணிக்க வேண்டும். நான் ஒரு சிங்கள பௌத்தன் ஆனால் நான் திருமணம் முடித்து இருப்பது ஒரு தமிழ் பெண். எங்களுக்கிடையில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. நான் நெருங்கி பழகுபவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மாவட்டத்தின் முஸ்லிம் மக்கள் எனது சகோதரர்கள்.
அதேபோன்று சிங்கள மக்களில் முஸ்லிம்களை வெறுப்பவர்களோ தமிழர்களை வெறுப்பவர்களோ ஒரு சிலர் இருக்கலாம் அதற்காக சிங்கள மக்கள் எல்லோரும் இனவாதிகள் என்று கூற முடியாது. அதே போன்று தமிழ் முஸ்லிம் சமூகத்திலும் ஒரு சில இனவாத போக்குடையவர்கள் மக்கள் மத்தியில் இனவாத நற்செய்தி புகுத்தியுள்ளார்கள். அந்த மக்கள் இனவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை ஆதரிக்கப் போவதுமில்லை. எமக்குத் தேவை இந்த நாடு வலமாக வாழ வேண்டும் என்பது. ஒரு இன்றும் கூட நான் மொட்டுகட்சியிலேயே இருக்கின்றேன்.
இந்த மண்டபத்தில் கூடியிருக்கும் இந்த மேடையில் இருக்கும் எங்களில் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அது ஒன்றே எங்களுக்கு இடையில் ஒரு ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கான சிறந்த மார்க்கம் ஆகும். ஆரம்பத்தில் என்னைப் போன்று ரணில் விக்ரமசிங்கவை எதிர்த்தவர் எவரும் இருக்க முடியாது. ஆனால் இந்த நாட்டை சரியான திசையில் விட்டு செல்லக்கூடிய ஒரே தலைவர் ரனில் விக்ரமசிங்க மட்டுமே என்பதை இன்று நாம் எதார்த்தமாக புரிந்து கொண்டுள்ளோம்.
கடந்த இரண்டரை வருடங்களில் வீழ்ச்சி கண்டிருந்த நாட்டை மீளக் கட்டி எழுப்புவதில் அவர் வெற்றி கண்டுள்ளார். நாம் அந்த இருண்ட யுகத்துக்கு போக முடியாது. அதற்கு இடமளிக்கவும் முடியாது. எதிர்வரும் 21 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு குடிமகனும் தங்களது வாக்குரிமையை ரணில் விக்ரமசிங்கவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதுதான் சரியான தீர்வாக அமையவும் வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்கள் அதேபோன்று தென்னிலங்கையில் வாழும் முஸ்லிம் தமிழ் மக்கள் எல்லோருமே இணைந்து ஒரே தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். சிங்கள சமூகம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் வாழ்பவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எந்த மொழியை பேசுபவர்களாக இருந்தாலும் நாம் இலங்கையர் என்று சிந்திக்க வேண்டும்.
பௌத்த சிங்கள மக்கள் இந்த நாட்டின் மீது எந்த அளவு உரிமை கொண்டிருக்கிறார்களோ அதே போல வடக்கு முதல் நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் கிழக்கு முதல் நாட்டில் வாழும் சிங்கள முஸ்லீம் மக்களுக்கும் அதே உரிமை இருக்கின்றது. அது நாங்கள் இலங்கையர்கள் என்று அடிப்படையில் நாங்கள் ஒருபோதும் இன மதம் மொழி பேதங்களைக் கடந்து இலங்கையர்கள் என்ற ஒரே சிந்தனையில் செயல்பட்டால் மட்டுமே இந்த நாட்டையும் மீள கட்டி எழுப்ப முடியும்.
இங்கு கூடியிருக்கின்ற முஸ்லிம் சகோதரர்கள் சகோதரிகளை பார்க்கும்போது நிச்சயமாக இந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார். அது சிங்கள வாக்குகளால் பெற்று வாக்கு அல்ல தமிழ் மக்களால் வழங்கப்பட்டு வாக்குகளால் அல்ல முஸ்லிம் மக்களால் வழங்கப்பட்ட வாக்குகள் அல்ல. நாங்கள் இலங்கையர்கள் என்ற அடிப்படையில் எல்லோரும் இணைந்து வழங்கப்பட்டு வாக்குகளால் ஒரு ஜனநாயகத் தலைவரை இந்த நாட்டுக்கு தொடர்ந்து ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பது எங்களது கடமையாகும்.
இதனை நாங்கள் மறந்து செயல்படக்கூடாது. எங்களுக்கிடையில் சிறு சிறு முரண்பாடுகள் இருக்கலாம். அந்த முரண்பாடுகளை நாங்கள் சுமூகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நான் எந்த ஒரு சமூகத்தையும் பிளவு படுத்தி பார்க்கவில்லை. எனது தொகுதியில் உள்ள ஒரே முஸ்லிம் கிராமமான கல்லொழுவையில் உள்ள முஸ்லிம் பாடசாலையில் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக என்னால் ஆன பங்களிப்பை செய்துள்ளேன். முஸ்லிம் வித்யாலயத்தின் கல்வி வளர்ச்சிக்காக என்னால் ஆன சகல ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
முதல் தடவையாக எனது இந்த பாடசாலையில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவை எமக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியை தருகின்றது. அதேபோன்று அத்தனகல்ல மற்றும் களனி போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நான் என்னால் ஆன ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுத்துள்ளேன். நான் ஒரு சிங்கள பௌதனாக சிந்தித்து இருந்தால் அவற்றை எனக்கு அந்தப் பாடசாலைகளுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது.
சிங்கள சமூகத்திலும் தமிழ் முஸ்லிம் சமூகத்திலும் இனவாத அரசியலால் அரசியலை நடத்தித்தான் பிழைக்க அவர்கள் அவர்களுக்கு இனவாதம் பேசாவிட்டால் அதிகாரத்துக்கு வரமுடியாது அதுதான் எதார்த்தம் ஆனால் நான் இங்கு நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இந்த இடத்தில் முஸ்லிம்கள் நிரம்பி இருக்கின்றீர்கள் நாங்கள் சிங்களவர்கள் எங்களுடைய அந்த ஒற்றுமையை பிரதிபலிக்கக் கூடியதாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ரணில் விக்கிரமசிங்க ஒரு இனவாதிகள் அல்ல மதவெறி கொண்டவரும் அல்ல, ஒரு மொழி வெறி பிடித்தவரும் அல்ல. அவர் இந்த நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு தலைவர். அவர் போன்ற ஒரு தலைவர் எமக்கு கிடைத்திருப்பது இந்த நாட்டு மக்கள் செய்த பாக்கியம் ஆகும்.
எனவே தான் இந்த முறையும் இந்த தேர்தலில் அவரை வெற்றி பெறச் செய்து இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இன மத மொழி கட்சி பேதம் என்று ஒன்றுபட்டு இருக்கின்றோம்.
எங்களுக்கிடையில் எந்த வேறுபாடும் கிடையாது. எப்படியாவது இந்த நாட்டை அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுத்த அந்த தலைவரை மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக்கி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நாட்டை மேலும் வளமையாக மாற்றுவதற்கு ஏனைய மக்களோடு முஸ்லிம்களும் ஒன்றுபட்டு செயல்பட முன்வர வேண்டும் என்று நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.