ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அங்குச் சென்றுள்ள அவர், மதத்தலைவர்களை சந்தித்து ஆசிபெற்றுக் கொண்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அதன்பின்னர், யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேனார்ட் ஞானப்பிரகாசத்தைச் சந்தித்து ஆசியும் பெற்றுக் கொண்டுள்ளார்.