எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 15,000இற்கும் அதிகமான வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன.
தேர்தல் ஆணைக்குழுவிடம் தற்போது சுமார் 25,000 வாக்குப் பெட்டிகள் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மூத்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டின் நீளத்திலேயே இந்த ஆண்டுக்கான வாக்குச் சீட்டு குறியிடும் தாள் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.