கொழும்பு தேயிலை ஏலத்தில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் கிடைக்கப்பெற்ற விலையினை காட்டிலும் இந்த வருடத்தில் அதிகூடிய விலை பதிவாகியுள்ளது.
இதற்கமைய இந்த வருடத்தின் கடந்த ஜூலை மாதத்தில் ஒரு கிலோகிராம் தேயிலைக்கு 4.9 அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றுள்ளது.
எனினும் கடந்த வருட ஜூலை மாதத்தில் 3.18 அமெரிக்க டொலரே கிடைக்கப்பெற்றிருந்ததாக இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.