இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2024 செப்டம்பர்-ஒக்டோபர் மாதங்களில் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யுமென இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
SLC கூற்று படி, இலங்கை U-19 மகளிர் அணி ஒரு முத்தரப்பு தொடரில் ஈடுபடும், இதில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக ரி 20 மற்றும் 50-ஓவர் போட்டிகளில் விளையாடுமென தெரிவித்துள்ளது.
பெண்கள் அதிக போட்டித்தன்மை கொண்ட அணிகளுக்கு எதிராக வெவ்வேறு நிலைகளிலும் விளையாடுவதால், இந்த சுற்றுப்பயணம் பெண்களுக்கு இன்றியமையாததாக இருக்குமென்று SLC கூறியுள்ளது.