( ஐ. ஏ. காதிர் கான் )
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும்” என, அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சில நேரங்களில், இது 60-70 வீதம் வரை உயரும் என்றும் அவர் கூறினார்.
பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், நேற்று (30.08.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு பேசும்போது,
“கோத்தாபயவின் 69 இலட்சத்தில் 50 இலட்சம் பேர், பாரம்பரிய பொதுஜன பெரமுன கட்சியல்ல. அதேபோல், சஜித்திற்குக் கிடைத்த 55 இலட்சம், சஜித்தின் சொந்த வாக்குகள் அல்ல. அது, கோத்தாபயவிற்கு எதிரான வாக்குகள்.
இந்நிலையில், கட்சிகளிடம் 80 இலட்சத்துக்கும் அதிகமான எழுதப்படாத வாக்குகள் உள்ளன. 12 இலட்சம் புதிய வாக்குகள் உள்ளன.
எனவே, NPP 70 இலட்சத்தைத் தாண்டும். NPP 51 வீதத்தை விட அதிகமாக உள்ளது. அரசியல் கண்ணோட்டத்தில், இது 60 -70 வீதங்களுக்கு அருகில் இருக்கலாம்” என்றும் சுட்டிக்காட்டினார்.