இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 30.08.2024 காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர்கள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார்.